Dec 14, 2015

வானவில் – என் பொண்ணு சொன்ன குட்டிக் கதை!


நான்காவது படிக்கும் என் பொண்ணு, எப்பொழுதாவது கதை சொல்வாள். நான் சொல்லும் “மொக்கை’ கதைகளை விட உயிர்ப்பாக இருக்கும்.
****

ஒரு நாள் காலை. ஒரு குடிசை வீட்டிலிருந்து இருந்து ஒரு பொண்ணு தூங்கி எழுந்தாள். வெளியே வந்து பார்த்தால், ஒரு அழகான வானவில்.
அப்பொழுது பூமியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அங்குமிங்கும் பதட்டத்துடன் ஓடினாங்க. பலர் செத்துப்போனார்கள்.

வானவில் இதைப் பார்த்து மிகவும் கவலை கொண்டது! தன்னை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, இறந்து போன அனைவருக்கும் உயிர்கொடுத்தது!

மக்கள் அனைவரும் தங்களுக்காக தன் உயிரை தந்த வானவில்லுக்கு நன்றி தெரிவித்தார்கள். இனிமேல் வானவில்லை பார்க்கமுடியாதேன்னு வருத்தப்பட்டாங்க!

திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்தாள். எல்லாம் கனவென்று அறிந்தாள். வெளியே வந்து பார்த்தாள். அழகான வானவில் ஒன்று அவளைப் பார்த்து சிரித்தது!

Dec 4, 2015

நிவாரண உதவி!


அன்பார்ந்த வழக்குரைஞர்களே, நண்பர்களே, பொதுமக்களே!

வணக்கம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என பல மாவட்டங்கள் தொடர் மழையால் மக்கள் தங்கள் வீடுகளை, உடைமைகளை, உறவுகளை இழந்து தவிக்கிறார்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறுக, சிறுக சேமித்த குறைந்த பட்ச செல்வங்களை கூட தொலைத்துவிட்டு சொந்த ஊரிலேயே அகதிகளாக பள்ளிக்கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் அடைக்கலமாகியிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு நிர்வாகம் எப்பொழுதும் போல தன் குணம் மாறாமல் அலட்சியமாக செயல்படுகிறது. எவ்வளவு இழப்புகளை, இறப்புகளை குறைத்து காண்பிப்பதில் தனது மொத்த கவனத்தையும் செலுத்துகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் பகுதி இளைஞர்களும், மக்களும் தான் தன்னை போல சக மக்களுக்கு எல்லா வகைகளிலும் உதவுகிறார்கள்.  மனிதாபிமானமுள்ளவர்கள், மக்களுக்கு உதவுவது நமது கடமை என்ற உணர்வுள்ளவர்கள், புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள், ஜனநாயக சக்திகள் தன்னால் இயன்றதை விடவும் அதிகம் சேகரித்து துன்பபடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மக்களோடு களத்திலும், போராடும் மக்களை பாதுகாக்கும் சட்ட போராட்டத்திலும் தொடர்ந்து ஈடுபட்டுவருவதை நீங்கள் அறிவீர்கள். நேற்றும் இன்றும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் பொழுது, அடிப்படை தேவைகளான தண்ணீர், உணவு, உடை, பாய், போர்வை என உதவி கோரி நின்ற பொழுது நமக்கு உடம்பெல்லாம் பதறுகிறது!

நமது உறுப்பினர்கள், நமக்கு பரிச்சயமான வழக்குரைஞர்கள், மூத்த வழக்குரைஞர்கள், ஜனநாயக சக்திகள் என நமக்கு பரிச்சயமான பலரையும் மேற்கண்ட உதவிகள் செய்வதற்கான நிதியையும், பொருட்களையும் கோரி வருகிறோம். தொலைபேசி அலைவரிசை பிரச்சனையால் பலரையும் தொடர்பு கொள்ள முடியாத சிரமத்தில் இருக்கிறோம். அதனால், இதையே அறிவிப்பாக எடுத்துக்கொண்டு உதவ கோருகிறோம்.

மேலும் இந்த பணியில் ஈடுபடுவதற்கு ஆர்வமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பழைய துணிகளை கொடுக்கவேண்டாம் எனவும் முடிவெடுத்துள்ளோம்.

வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்ட்டன்,
செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
தொடர்பு கொள்ள :
9094666320
9842812062

வங்கி கணக்கு விவரம் :
Porkodi Vasudevan,
Bank of India,
A/c No: 800010100026977
Chennai Main Branch,
IFSC Code: BKID0008000
MICR Code: 600013009