· அம்மாவிற்கு
பிடித்தது இட்லி.
ஐந்து
குழந்தைகளுக்கு தோசை சுட்டால்
நேரம்
என்ன ஆவது என்பார்.
·
பிடிவாதத்தால்
தோசைகளும் கிடைக்கும்.
பல
நேரங்களில் ‘அடி’தோசை தான் கிடைக்கும்.
·
வளர்ந்த
பிறகு தான் தெரிந்தது.
கனமான
கல்தோசையை தான்
தோசை
என பலகாலம் ஏமாற்றியிருக்கிறார் என!
·
வளர்ந்த
நாட்களில்
மெல்லிசா
ஏன் சுட்டுத்தரவில்லை என்றால்,
’பசங்களுக்கு
பசி அடங்காதுடா! என்பார் அன்புடன்.
·
உட்கார
வைத்து விதவிதமாய் மணக்க மணக்க
சுட்டு
பரிமாறலாம் என்றால்
காலம்
இருவருக்கும் ஐநூறு கி.மீட்டர்
தூரம்
வைத்திருக்கிறது.
·
எத்தனை
விதமாய் சுட்டாலும்,
அம்மா
தரும் கனமான தோசைக்கும், சாம்பருக்கும் தான்
சுவை
அதிகம் இருக்கிறது.
- குருத்து
No comments:
Post a Comment