எதிர்த்த வீட்டு
அருளம்மா,
பக்கத்துவீட்டு
பாத்திமாக்கா
அடுத்த தெருவில்
இருந்து வரும் பாட்டியம்மா – என
பலரும் எங்க வீட்டு
முருங்கை கீரையை
வாங்கி செல்கிறார்கள்!
தேனாம்பேட்டையிலிருக்கும்
சகோதரி
வரும் பொழுதெல்லாம்
கீரை கொண்டுவரசொல்லி
நினைவுப்படுத்துகிறாள்!
வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம்
தோழி கீரை கொண்டு
போகிறாள்!
இப்பொழுதெல்லாம்
நானும்
கீரை சாப்பிட ஆரம்பித்திருக்கிறேன்! :)

