தனியார் 4 பேருந்து வைத்திருந்தாலும் ஒரு தரமான தளத்தை (web site) பராமரிக்கிறார்கள். அரசு நாலாயிரம் பேருந்து வைத்திருந்தாலும் ஒரு மொக்கை தளத்தை இயக்கி வருகிறார்கள்.
தனியார் வலைத்தளத்தில் பெண் ஒருவர் இருக்கையை பதிவு செய்தால், அது பெண்ணிற்கான இருக்கை என காட்டும். பக்கத்து சீட்டில் பெண் ஒருவர் தான் முன்பதிவு செய்யமுடியும்.
அரசு வலைத்தளத்தில் அப்படி ஒரு வசதியும் இல்லை. நான் சென்ற பேருந்தில் பெண் ஒருவர் 17வது இருக்கையை முன்பதிவு செய்திருக்கிறார். அருகே உள்ள 18வது இருக்கையை ஆண் ஒருவர்
பதிவு செய்திருக்கிறார்.
ஆண் அருகே பயணிப்பதில் பெண்ணுக்கு சங்கடம். ஆண் பயணிக்கு நடத்துநர் வேறொரு சீட்டை மாற்றித்தர வேண்டிய
நிர்ப்பந்தம். இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. ஆகையால், எல்லா இருக்கைகளும் நிரம்பி, கடைசி வரிசையில் மட்டுமே இடம் இருக்கிறது. அந்த பயணி கடைசி வரிசையில் அமரமுடியாது
என்கிறார்.
15 நிமிடம் பஞ்சாயத்து நடந்து, பிறகு நடத்துநர் தனது செல்வாக்கில் வேறோரு பேருந்தில் இருக்கை ஏற்பாடு செய்ததும் சுபம்.
இது மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம். அரசு தளங்களில் வெளியிடப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் வேலை செய்யாது. அப்படியே வேலை செய்தாலும், தொலைபேசியை மதித்து எடுக்க ஆள் இருக்காது.
திட்டமிட்டே அரசு துறையை இப்படி சிதைக்கிறார்கள். பிறகு, மக்களையே தனியார் தான் சிறந்தது என பேச வைத்து அரசு துறையை ஊத்தி மூடுவதற்கான எல்லா வேலைகளையும் நகர்த்துவார்கள்!
போராட்டமின்றி எதையும் பாதுகாக்க முடியாது!

2 comments:
ஓரிரண்டு பஸ் ரூட்டுகள் வைத்து இருக்கும் முதலாளிகள் கூட பெரும் செல்வந்தர்களாக இருக்கையில், நமது அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏன் இப்படி நஷ்டத்தில் இயங்க வேண்டும்? அரசு ஊழியர்களின் பொறுப்பின்மையும் அரசியல் வாதிகளின் ஊழலுமே இதற்குக் காரணம்!! அநேகம் பேருந்து நிலையங்களில் அரசு பஸ்கள் எத்துனை காலியாக இருந்தாலும் வெகு நேரம் காத்திருந்து கூட தனியார் பஸ்களில் மக்கள் ஏறுவதை பல சமயங்களில் நான் பார்த்து இருக்கிறேன். அரசு பஸ் சர்வீசின் லட்சணம் அப்படி இருக்கிறது!! இதற்கெல்லாம் என்றுதான் விடிவுகாலமோ?? அனைத்தையும் சரிசெய்ய உறுதி பூணும் தலைமை அவசியம் வேண்டும்!!
ஆணுக்குப் பெண் சமம், கருவறையில் பெண்களை அனுமதிக்க வேண்டும். சபரிமலையில் பெண்கள் வயது வரம்பின்றி அனுமத்க்கப்பட வேண்டும். ஆனால் பஸ் ரயில் உள்ளாட்சி மன்றங்கள் வேலை வாய்ப்பு என்பவற்றில் இட ஒதுக்கீடு வேண்டும் அங்கு பெண் ஆணை விட உயர்ந்தவர்.
Post a Comment