Oct 13, 2008

"பாட்டாளி மக்கள்" கட்சியின் இதழா? - தமிழ் ஓசை?



பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து மார்ச் 2006 லிருந்து தமிழ் ஓசை என்ற நாளிதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. பலரும் அறிந்த செய்தி தான் இது. புதிய செய்தி என்னவென்றால்....

சமீபத்தில் அதன் குழுமத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரை சந்தித்து வேறு வேறு விசயங்கள் பேசும் பொழுது, ஒரு செய்தி சொன்னார். தமிழ் ஓசையை "பாட்டாளி மக்கள் கட்சி" நடத்துகிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு தர வேண்டிய இ.எஸ்.ஐ, பி.எப். உரிமையை
தருவதில்லை.

"மக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனையென்றால், பத்திரிக்கைகளிடம் சொல்வார்கள். பத்திரிக்கை அலுவலத்திலேயே இப்படி அநியாயம் இழைக்கப்படுகிறது என்றால் நாங்கள் யாரிடம் போய் முறையிடுவது?" என புலம்பினார்.

சென்னையில் மட்டுமல்ல, பத்திரிக்கை எனறால், தமிழகம் முழுவதும் நிருபர்கள் இருப்பார்கள். அலுவலக பிரதிநிதிகள் இருப்பார்கள். இவ்வளவு ஊழியர்களுக்கு பிடிக்கவில்லை
என்றால், ஆச்சர்யமாய் இருந்தது.

சில நிறுவனங்களில் புதிதாய் சேர்ந்த ஊழியரை உடனடியாக இ.எஸ்.ஐ, பி.எப்-பில் சேர்க்காமல், 6 மாதம் அல்லது 1 வருடம் பொறுத்திருந்து, பிறகு இ.எஸ்.ஐ. பி.எப் பிடிப்பார்கள். அப்படி இருக்குமோ என சந்தேகம் இருந்து, பரவலாய் விசாரிக்கும் பொழுது, யாருக்குமே இல்லை என்கிறார்கள்.

தமிழகத்தில் பல பிரச்சனைகளைப் பற்றி பத்திரிக்கைகளில் தினம் ஏதாவது அறிக்கை விட்டு கொண்டேயிருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். அவருடைய கட்சி பத்திரிக்கையிலேயே இப்படி ஒரு
அநியாயம்?

பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்கம் வேறு நிறுவனம் என்றால், தொழிலாளர்களுக்கு இந்த உரிமையை போராடி வாங்கித்தந்திருக்கும். கட்சி பத்திரிக்கை என்றால், கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கவேண்டும் என அமைதியாக இருக்கிறதோ?

மக்களுக்காக தான் கட்சி. தன் அலுவலகம் என்றால், கட்சி ஒரு முதலாளி தானே? எல்லா முதலாளிகளையும் போலத்தான் அராஜகமாக, லாபத்தை மனதில் வைத்து நடந்து கொள்ள முடியும்.

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவாளர்களே! நீங்கள் தான் தொழிலாளர்களுக்காக ராமதாஸ் அவர்களிடம் "இது நியாயாமா?" எனக் கேட்டு சொல்ல வேண்டும்.

3 comments:

Anonymous said...

நான் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர். தமிழ் ஓசை வாசகனும் ஆவேன்.

தங்கள் கருத்து நியாயமானது “தமிழ் ஓசை” நாளேட்டின் நிர்வாகத்தின் கவனத்திற்கு இதை கொண்டு செல்லவும்.

மின்னஞ்சல் முகவரி: tamilosai1@yahoo.co.in

அமிர்தா said...

தான் சார்ந்திருக்கும் கட்சி, மிகச்சரியாக இயங்க வேண்டும் என ஒவ்வொரு தொண்டரும் போராடவேண்டும். கட்சி அப்பொழுது தான் சரியாக இயங்கும்.

தாங்கள் வேண்டிக்கொண்டபடி அனுப்பி வைத்திருக்கிறேன். கருத்து நியாயமானது என ஏற்றுக்கொண்ட அரியாங்குப்பத்தார் அவர்களுக்கு நன்றி.

Anonymous said...

test