Nov 22, 2014

யாராவது சொன்னால் நல்லது!

நேற்று மாலை சென்னை அண்ணாநகர் வளைவு அருகே சிக்னலுக்காக காத்திருந்தேன். இரண்டு வளைவுகளுக்கு நடுவில்  போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த காவல்துறைக்கென்று ஒரு அறை உண்டு.  அந்த அறைக்கு மேலே, அவசர உதவிக்கென்று 16 வகையான தொலைபேசி எண்கள் எழுதியிருந்தார்கள்.

1.அவசர உதவி காவல் 100
2. ஆம்புலன்ஸ் 108
3. குழந்தைகள் உதவி 1098
.....
அதில்
14. லஞ்ச ஒழிப்பு புகார் உதவி:

என எழுதி எந்ததொலைபேசி எண்ணும் எழுதாமல் இருந்தார்கள்.

தினம் மக்களை மறிச்சு, இதே இடத்தில் கல்லா கட்டுறோம்.  லஞ்ச ஒழிப்பு எண்ணை எழுதி வைச்சு, நம்ம பொழப்புல நாமே மண்ண அள்ளிப்போட்டுக்குவானேன் என எழுதாமல் விட்டுவிட்டார்கள்!

என்ன ஒரு சுதாரிப்பு!  காவல்துறைன்னா சும்மாவா? :)

1 comment:

வெட்டிப்பேச்சு said...

அரசு அலுவலகங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்வது போல போக்குவரத்துக் காவல் துறைக்கு ஆசாமி எங்கு நின்று வாங்குவார் எனத் தெரியாததாலோ அல்லது எங்கு வேண்டுமானாலும் நின்று வாங்கலாம் எனத் தெரிந்ததாலோ போடவில்லை போலிருக்கிறது.