Jan 3, 2015

கற்றல்!



எதிர்த்த வீட்டு அருளம்மா,
பக்கத்துவீட்டு பாத்திமாக்கா
அடுத்த தெருவில் இருந்து வரும் பாட்டியம்மா – என
பலரும் எங்க வீட்டு முருங்கை கீரையை
வாங்கி செல்கிறார்கள்!

தேனாம்பேட்டையிலிருக்கும் சகோதரி
வரும் பொழுதெல்லாம் கீரை கொண்டுவரசொல்லி
நினைவுப்படுத்துகிறாள்!

வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம்
தோழி கீரை கொண்டு போகிறாள்!

இப்பொழுதெல்லாம் நானும்
கீரை சாப்பிட ஆரம்பித்திருக்கிறேன்! :)

2 comments:

vimal said...

engal veettu edhir veettamma naaloru meniyum pozhudhoru vannamumaaga kaiyil thurattiyudan (sorattukol) engal veettu murungai marathai mottai adithu kondiruppargal indha padhivu padithadhum niyabagathirku varugiradhu.

வலிப்போக்கன் said...

எங்கள் வீட்டில் வளர்ந்த முருங்கை மரம் எங்கவீட்டின் கூரையின்மேல் என்பதால் நேற்று வெட்டி விட்டோம். சிறிது நேரத்தில் முரங்கைக்கீரைகளை காணோம். இப்பத்தான் தெரிகிறது.