Jan 3, 2015

Unthinkable – சவாலான படம் தான்!



அமெரிக்க குடிமகனான ஒரு முசுலீம், அமெரிக்காவின் மூன்று முக்கிய நகரங்களில், அணுகுண்டை வெடிக்க ஏற்பாடு செய்து, தானாக கைதும் ஆகிறார்.  இராணுவம், காவல்துறை, உளவுப்பிரிவு, சிறப்பு பிரிவு என எல்லோரும் பிடிப்பட்டவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபடுகிறார்கள். ஒருவர் சாதாரணமாக கேட்டால், இன்னொருவர் விரல்களை வெட்டி, மின்சார அதிர்ச்சி கொடுத்து என எல்லாவித கொடூர சித்ரவதைகளையும் செய்து கேட்பார். இதற்கிடையில்,  ஒரு இடத்தில் வைத்த குண்டு வெடித்து, 53 பேர் கொல்லப்படுகிறார்கள். துணைவியாரை அழைத்து வந்து மிரட்டி கேட்டும் சொல்லாததால், கழுத்தறுத்து கொல்கிறார்கள். அடுத்து அவனுடைய இரண்டு குழந்தைகள் என நகரும் பொழுது, குண்டு வைத்த இடங்களை சொல்கிறார்.  இன்னும் சில இடங்களில் இருக்கிறது அதையும் சொல்! என கேட்கும் பொழுது, தற்கொலை செய்துகொள்கிறார். சொன்ன இடங்களில் குண்டுகளை அகற்றும் பொழுது, சொல்லாத இன்னொரு இடத்தில் குண்டு வெடிக்க தயாராகிறது. படம் முடிகிறது!
*****

தீவிரவாதிகளை சட்டத்திற்குட்பட்டு விசாரிப்பதா? அல்லது மீறியா? என்பதை விசாரணை அதிகாரிகளுக்குள் நடக்கும் விவாதத்தை, பார்வையாளனுக்கு நகர்த்தி, சட்ட வகை மீறி செய்வது சரி தான் என்பதை ஏற்க வைக்கிறார்கள்.  அமெரிக்கா தனது மேலாதிக்கத்தால், உலகம் முழுவதும் செய்யும் லட்சக்கணக்கான அரசியல், இராணுவ கொலைகளுக்கு நம்மிடம் ஆதரவு கோருகிறது என்ற வகையில் இந்த படம் மிக ஆபத்தானது. (வினவு சொல்கிற படி) நாம் அமெரிக்காவின் படுகொலைகளை மறந்துவிட்டால், இந்த படம் நம்மை வென்றுவிடும்!

97 நிமிடங்கள் விறு விறு என ஓடும் இந்த படம் 2010ல் வெளிவந்தது. படம் போணியாகவில்லை என விக்கிபீடியா தகவல் சொல்கிறது!

இந்த படத்திற்கு ஒரு விரிவான விமர்சனம் வினவில் வந்தது. அனைவரும் அவசியம் படிக்கவேண்டும்.

1 comment:

வலிப்போக்கன் said...

உலகம் முழுவதும் வெளியிடப்படும்போது போனியாக வாய்பில்லை..