Apr 2, 2007

பெருநகரமும் செல்பேசியும்!


பல உறவுகள்
செல்லில்
எண்களாக வாழ்கிறார்கள்.
சிலர்
குரல்களாக மட்டும்.

எங்கிருக்கிறாய்?
எப்பொழுது வருவாய்?
பொண்டாட்டிகள்
தொல்லை செய்கிறார்கள்.

பேசிக்கொண்டே
சாகசமாய்
வாகனம் ஓட்டுகிறார்கள்.
ரயில் கிராஸிங்கில்
செத்தும் போகிறார்கள்.

'அதிகம் பேசுங்கள்'
ஆஃபர் தரும்பொழுதெல்லாம்
அறுவைக்காரர்கள்
அழ வைக்கிறார்கள்.

முன்பெல்லாம்
தனியாய் பேசுபவர்களை
காணமுடியும்.
இப்பொழுது கண்டுபிடிக்க
முடிவதில்லை.

03.04.2007 - காலை 11.25

6 comments:

லக்ஷ்மி said...

//பொண்டாண்டிகள்
தொல்லை செய்கிறார்கள்.//

பொண்டாட்டிகள் - இல்லையா?

//முன்பெல்லாம்
தனியாய் பேசுபவர்களை
காணமுடியும்.
இப்பொழுது
முடிவதில்லை//

Hands free instrument போட்டு பேசும் ஆட்களை நீங்கள் பார்த்ததில்லையா? உற்று பார்க்காவிடில் அவர்களை இந்த லிஸ்டில்தான் சேர்க்க வேண்டி வரும்.

Anonymous said...

adhu vanthu

அமிர்தா said...

சொற்பிழை, பொருட்பிழை இரண்டையும் திருத்திவிட்டேன்.
லட்சுமி அவர்களுக்கு நன்றி.

'அது வந்து' - தொண்டை வரைக்கும் வந்துருச்சு! சொல்லிரலாமே அனானி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவிதை நன்றாக இருக்கிறது..

ஒரு பெண்ணாக இருப்பதால்
இப்படி கேட்டே ஆக வேண்டும் என்கிறது என் மனது..
எங்கிருக்கிறாய் எப்போது வருவாய் என்றால் தொல்லையா?

எப்போது வருவார் என்று தெரிந்தால் சமைத்துவைப்பார்களா இருக்கும்.வெளியே செல்வதாய் இருந்தால் சாவி குடுப்பதைப் பற்றிய கவலையாக இருக்கலாம்...

ஹ்ம்...தொல்லையாக நினைப்பவர்களுக்கு தொல்லையே வந்து சேரும்..அன்பாக விசாரிப்பவர்களுக்கு பட்டம் இப்படியா?

தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்..சும்மா.

அசுரன் said...

சாக்ரடீஸ் என்ற பெயரில் அடிக்கடி பின்னூட்டமிடுபவர் நீஙகள்தானா?

அசுரன்

அமிர்தா said...

//சாக்ரடீஸ் என்ற பெயரில் அடிக்கடி பின்னூட்டமிடுபவர் நீஙகள்தானா?//

என்னுடைய நண்பர். வலைப்பதிவு உலகத்திற்கு இருவருமே புதிய முகங்கள் என்பதால் முதலில் இருவரும் இயக்கினோம். இப்பொழுது அவர் தனிக்குடித்தனம் (பிளாக்) துவங்கிவிட்டார். பார்க்க :

http://socratesjr2007@blogspot.com