Mar 31, 2007

என் பெயர் R.S.S. - கவிதை

என் பெயர் R.S.S.

பிறக்கும் பொழுது
எல்லாக் குழந்தைகளும்
நல்ல குழந்தைகள். அப்படியா?
நான் அந்த ரகம் இல்லை.
நஞ்சு கொண்டுநான் பிறந்தேன்.

நான்
செம்டம்பர் 27, 1925
விஜயதசமி நாளில்
உயர்குடியில்
வீர சிவாஜி பிறந்த
மராட்டிய மண்ணில்
பிறந்தவன்.

என் அப்பா கேசவ பல்ராம் கெட்கேவர்
இனம் - இட்லர் இன்மான ஆரிய இனம்
சாதி - சித்பவன் பார்ப்பான் சாதி.

'இந்துயிசமே எங்கள் தேசியம்' - என
கொள்கை வழி பிறந்தவன் நான்.
இதில் எந்தவித சம்ரசமற்றவன்.

காந்தியைக் கொன்ற
நாதுராம் கோட்சே
என்னைத் தூக்கி வளர்த்தவர்.

அறியாமை இருள்
எங்கெல்லாம் இருந்ததோ
அங்கெல்லாம் தழைத்து வளர்ந்தேன்.
சாதி, மதம் எவ்விடத்தில் இருந்ததோ
அவ்விடத்தில்
காட்டுத் தீயாய்ப் பற்றிக் கொண்டேன்.

எனக்கு உணவு குருதி.
இரத்தம் குடிக்காமல்
என்னால்உயிர் வாழமுடியாது.
இள ரத்தமெனில்
இன்னும் ருசி.

நான் எந்த மண்ணில்
தவழ்ந்தேனோ, வளர்ந்தேனோ
அந்த மண் கலவர பூமியானது.
எனக்கு மறதி அதிகம்.
நான் குடித்தஉயிர்களின்
எண்ணிக்கையைக்
கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.
ஏனென்றால்
கணக்கிடலங்காது.

கடந்த 82 ஆண்டுகளில்
பெரிய மரமாய், மண்ணில்
ஆழப் பதிந்து நிற்கிறேன்.
உலகமெங்கும், இன்னும்
என் வேர்களை
விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

இந்து முன்ணணி, இந்து மஸ்தூர் சங்,
பஜ்ரங்தள், A.B.V.P.,
விஸ்வ இந்து பரிசத் - என
என் விழுதுகள் என்னைப்
பலப்படுத்துகின்றன.

எனக்கு விரோதிகள் உண்டு.

முதல் விரோதி - கம்யுனிஸ்ட்,
2வது விரோதி - முஸ்லீம்.
3வது விரோதி - கிறித்துவன்.
4வது விரோதி - ஜனநாயகவாதி.

எனக்கு வலிமையான மகன் உண்டு.
பெயர் - பாரதீய ஜனதா.
எனக்கு ஆபத்து வருகிற பொழுதெல்லாம்
துடித்து, காப்பாற்றுவன் அவனே.

என்னை அழிக்கும் முயற்சியில்
தோற்றுப் போனவர்கள் ஏராளம்.

தமிழகத்தில்
என் தளபதிகள்
மடாதிபதி சங்கராச்சாரியா,
வீரத்துறவி இராமகோபலன்,
அறிவுசீவி துக்ளக் சோ,
பா.ஜ.க பிரமுகர் இல. கணேசன்.

உங்களிடத்திலும் சாதி, மதம்
இருக்கிறதா?
எனக்கு பசிக்கிறது.
ரத்தம் வேண்டும்.
இளரத்தம் வேண்டும்.
இதோஎன் படை பரிவாரங்களோடு
புறப்பட்டுவிட்டேன்.
முடிந்தால்,
என் முதல் எதிரியான கம்யுனிஸ்களிடம்
அடைக்கலம் தேடிக் கொள்ளுங்கள்.

பின்குறிப்பு :
கம்யுனிஸ்டுகள் என்றால்
C.P.I., C.P.I (M) என அப்பாவித்தனமாய்
நினைக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.
நான் சொல்வது நக்சல்பாரிகளை.
என்னை அழிக்கும் சக்தி
அவர்களுக்கு மட்டுமே உண்டு.

4 comments:

Anonymous said...

super

Maha said...

நீங்கள் தான் முதல் விமர்சகர். நன்றி அனானி.

ஸ்டாலின் said...

//என் பெயர் R.S.S

பிறக்கும் பொழுது
எல்லா குழந்தைகளும்
நல்ல குழந்தைகள்.
நான் அந்த ரகம் இல்லை.
நஞ்சு கொண்டு
நான் பிறந்தேன்.//

//எனக்கு விரோதிகள் உண்டு.
முதல் விரோதி - நக்சல்பாரிகள்.
2வது விரோதி - முஸ்லீம்.
3வது விரோதி - கிறித்துவன்.
4வது விரோதி - ஜனநாயகவாதி.

என்னை
வேரோடு அழிக்கும் சக்தி
நக்சல்பாரிகளுக்கு மட்டுமே உண்டு

எனக்கு பசிக்கிறது.
ரத்தம் வேண்டும்.
இளரத்தம் வேண்டும் - இதோ
என் படை பரிவாரங்களோடு
புறப்பட்டுவிட்டேன்.
முடிந்தால்
என் முதல் எதிரியான
நக்சல்பாரிகளிடம்
இணைந்து கொள்ளுங்கள்.//

என்னோடு நில் அல்லது எனக்கு எதிரே நில் என்று சொல்லும் பார்பனீய பயங்கரவாதிகளை("மதச்சார்பற்றவர்களும் எங்கள் எதிரிகள்தான்" என்று பிரவீன் தொகாடியா சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்) தோலுரித்திருக்கும் கவிதை..

நான் இரண்டாவது விமர்சகர் நானும் சொல்கிறேன் சூப்பர்..

தோழமையுடன்
ஸ்டாலின்

அசுரன் said...

இதை எழுதியது நீங்கள்தானா... முன்பு இந்த கவிதையை தோழர் ஸ்டாலின் சில இடங்களில் பின்னூட்டியிருந்தார். நானும் எங்கிருந்தோ எடுத்தாண்டிருப்பார் என்று நினைத்தேன். வெகு அருமை....

அசுரன்