May 8, 2007

பெருநகர பயணம் - கவிதை


விரைவாய் அதிவிரைவாய்
எல்லா வாகனங்களும்
முகத்தில் புகையைத் துப்பி
முன்னேறி செல்கின்றன.

பச்சைசிக்னல் விழுவதற்கு முன்
விர்ரெனப் பறக்கின்றன.
சிவப்புசிக்னல் விழுந்தபின்பு - இன்னும்
விரைவாய் பறக்கின்றன.

ஓட்டுகிற முகங்களில்
இறுக்கம் நிலவுகின்றன.

எல்லா வாகனங்களிலும்
கோரமான கீறல்கள்
கண்ணை உறுத்துகின்றன.

பயணிக்கையில்தான்
எல்லா கவலைகளும்
மேலெழும்புகின்றன.

பயணச் சாவுகளை
தினமும்
செய்திகள் தெரிவிக்கின்றன.

உயில் எழுதவேண்டும்
விரைவில்.
யாருக்கு எவ்வளவு தரவேண்டும்?
பட்டியல் தயாரிக்க வேண்டும்
தர யாருமில்லை! - இருப்பினும்
நாணயஸ்தனாய் சாகவேண்டும்.


காலை 11.45 மணி - 29.03.2007.

1 comment:

பிரசாத் said...

ஆம்!!! நீங்கள் சொல்வது சரிதான்
உயில் எழுதத்தான் வேண்டும்
ஒன்றல்ல… இரண்டு

ஒன்று
என் உடலையும் உடமைகளையும்
என் சந்ததிக்கு

மற்றொன்று
என் உயிரை
இந்த வாகன ஓட்டிகளுக்கு


இவர்களெல்லாம் தங்கள் வேகத்தால் காலத்தை வெல்ல முயன்று காலனிடம் தோற்றுப்போகின்றனர்.