Mar 20, 2009

பொதுக்கூட்டம் - அறிவிப்பு!

அன்பார்ந்த பதிவர்களே!

உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீதான காவல்துறையின் வெறிகொண்ட தாக்குதலுக்கு பிறகு, வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்தை நசுக்க அரசும், பல பார்ப்பன பத்திரிக்கைகளும் வழக்கறிஞர்களை பொதுமக்கள் மத்தியில் வில்லனாக்க முயற்சி செய்தன. இந்த போராட்டத்தை ஆதரிக்கும் நாம், இந்த போராட்டத்தின் அவசியம், காவல்துறையின் அட்டூழியத்தையும் மக்களிடத்தில் அம்பலப்படுத்த பொதுக்கூட்டம் நடத்த 10.03.2009 அன்று அனுமதி கேட்டால், தேர்தலை காரணம் காட்டி அனுமதி தர காவல்துறை மறுத்துவிட்டது.

நீதிமன்றத்திலும் அனுமதி வாங்க முடியாத நிலை. பிறகு, இந்த அனுமதி மறுத்ததை புரட்சிகர அமைப்புகள் சுவரொட்டி மூலம், அம்பலப்படுத்திய பிறகு, மீண்டும் அனுமதி தர முன்வந்தார்கள். பிறகு, மீண்டும் மனது மாறி மறுத்துவிட்டார்கள். ஜனநாயக முறைப்படி ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறையின் "மூடு" தான் தீர்மானிக்கிறது.

இப்பொழுது, மீண்டும் அனுமதி தந்திருக்கிறார்கள். இறுதி நேரத்திலும் ஏதாவது அனுமதி மறுக்கலாம். நமக்கு போராட்டம் தவிர, வேறு குறுக்குவழிகள் இல்லை.

போராடுவோம்!


பொதுக்கூட்டம்

நாள் : 25.03.2009 (புதன்கிழமை)

நேரம் : மாலை 6 மணி

இடம் : எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்

தலைமை :

தோழர் அ.முகுந்தன், தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

சிறப்புரை :


தோழர் மருதையன், பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்.

உரையாற்றுவோர் :

தோழர் பி. திருமலைராசன்,
முன்னாள் தலைவர்,
கீழமை நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கக்கூட்டமைப்பு,
தமிழ்நாடு-புதுச்சேரி

தோழர் சி. ராஜு,
ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

தோழர் ஆர். சங்கரசுப்பு,
தலைவர்,
அனைத்திந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கம்


புரட்சிகர கலை நிகழ்ச்சி :


மக்கள் கலை இலக்கிய கலைக்குழு

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு:

மக்கள் கலை இலக்கிய கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

பின்குறிப்பு : இதில் கடைசி நேர மாறுதல் ஏதும் மாற்றம் இருப்பின் வினவு தளத்தில் வெளியாகலாம்.

5 comments:

ttpian said...

உண்மை!
வலைக்குல் வீழ்ந்த மீன்கலாய்,சின்கல ரானுவம்-தமிழ் ஈழம்,உள்ளது!
உலகின் பணக்கார நாடுகலில் தமிழ் ஈழமும்

Anonymous said...

சோதனை

Anonymous said...

போஸ்ட் மாடர்னிசம் பற்றி ஒருநாள் கூட இந்த மருதய்யன் பேசியதே இல்லை. அப்படியிருக்கையில் இவருக்கும் கலைக்கும்-இலக்கியத்துக்கும் என்னப்பா தொடர்பு.

அமிர்தா said...

//போஸ்ட் மாடர்னிசம் பற்றி ஒருநாள் கூட இந்த மருதய்யன் பேசியதே இல்லை. அப்படியிருக்கையில் இவருக்கும் கலைக்கும்-இலக்கியத்துக்கும் என்னப்பா தொடர்பு.//

ராஜீவன்,

இதென்ன கேள்வி? அதைப் பற்றி பேசவில்லை? இதைப் பற்றி பேசவில்லையென?

பாரதி தம்பி said...

வாய்ப்பு இருந்தால் எம்.ஜி.ஆர். நகரில் சந்திப்போம் தோழர்.