மகன், மகள்
பேரன், பேத்திகளுக்கு அப்பால்
'மக்கள்' உயிரின் மீதும் கரிசனம்
நம் மாண்புமிகு முதல்வருக்கு.
ஹெல்மெட் முதலாளிகள்
முடியில்லாத தலைக்கு
வைரம் பதித்த
தங்க ஹெல்மெட் தந்திருப்பார்களோ!
விசுவாசமான காவல்துறைக்கு
'புதிய போனசு'
அறிவிப்போ?
'வாக்கு வங்கி'
வாழ்ந்தால்தான்
நாமும், நம் சந்ததியினரும்
வாழமுடியும் என்ற
தொலைதூர சிந்தனையோ?
- நன்றி - குருத்து பிளாக்கிலிருந்து
18 comments:
உங்களுக்கும் இருக்கலாம் சில கேள்விகள்.
தயங்காமல் கேளுங்கள்.
Why don't we think straight. Wearing Helmet is good for us and not for Politicians or Police or Helmet Manufacturers.
Is there anything wrong in wearing helmet ????????
தூசி அலர்ஜி எனக்கு இருப்பதால், ஹெல்மெட் நல்லது என்பதை நான் நன்றாகவே உணர்ந்து, 5 மாதங்களுக்கு முன்பே நான் வாங்கி பயன்படுத்தி, பழசும் ஆகிவிட்டது.
எல்லா சட்டங்கள், திட்டங்கள் அறிவித்த சில காலத்திற்குப் பின்னால் அல்லது ஆட்சி மாறிய பிறகு, ஊழல்கள் வெளிப்படுவது நம் நாட்டுக்கு புதிதா என்ன?
சவப்பெட்டியில், சுடுகாட்டு கொட்டகைகளில் ஊழல் உலகம் அறிந்தது தானே?
//நேர்மையான சட்ட திட்டங்கள் போடணும்.
அவைகளை ஒழுங்கா கடைப் பிடிக்க வைக்கணும்.
இந்த இரண்டும் ஒழுங்கா நடந்திட்டா ... //
இப்படி இங்க எழுதியிருக்கிறேன். ஆனாலும் நாமளும் எந்த சட்டம் போட்டாலும் இந்தமாதிரி கேள்வி கேட்போம்; ஆனால், follow பண்ண மாட்டோம் .. இல்லீங்களா?!
சட்டங்கள், விதிமுறைகள், நீதிக்கதைகள் எல்லாம் மக்களுக்கு மட்டும் தானா?
மக்கள் அறியாமையால் செய்யும் தவறுகளுக்கும், தேர்ந்தெடுத்த பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் திட்டமிட்டு செய்யும் தப்புகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது தருமி.
மற்ற அரசியல்வாதிகள் மாதிரி கிடையாதுங்க கருணாநிதி. மக்களுக்காகவும் சிந்திப்பாருங்க!
அவர் எவ்வளவு பெரிய தலை! அவருடைய தலைமுடியப்போய் கிண்டல் பண்றங்களே! இதெல்லாம் நல்லா இல்லீங்க!
- suresh, chennai
//.. தேர்ந்தெடுத்த பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் திட்டமிட்டு செய்யும் தப்புகளுக்கும் ..//
அவைகளுக்குத் தப்பு என்று பெயர் கொடுப்பதைவிடவும், கொள்ளையோ கொள்ளை என்று சொல்லலாம்.
ஆனால் நீங்கள் சொல்வது போல்,
//மக்கள் அறியாமையால் செய்யும் தவறுகளுக்கும்,..// என்பதை ஒத்துக் கொள்ள முடியாது. எது அறியாமை? எல்லாம் திமிர். எவண்டா என்ன கேக்குறது என்ற திமிர்.
இரண்டுக்கும் //வித்தியாசம் இருக்கிறது// - ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இருவருமே தப்பு செய்து கொண்டிருக்கிறோம்.
ஹெல்மட் போடு உனக்கு நல்லது; அது சட்டமும் கூட என்று சொன்னால் அது அரசியல்வாதி சொன்னது என்பதால் அதைச் செய்ய மாட்டேன் என்பது தவறு /தப்பு/ மடத்தனம் /திமிர் - இதில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் கூட எடுத்துக் கொள்ளலாம்.
let us accept and respect the law of the land - at least let it start with the so-called educated (bloggers)!
கல்விக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு உண்டா இல்லையா தருமி.
சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. நம் மத்திய, மாநில அரசுகளால், மக்களுக்கு அடிப்படை கல்விக்கூட கொடுக்க முடியவில்லை என வெட்கமின்றி சொன்னது.
அடிப்படைக் கல்வி என்றால், நாம் +2 என நினைத்துவிடக் கூடாது. வெறும் 8-ம் வகுப்பு தான்.
கோழிக்கால் உடைந்து போனதற்காக பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை. கொழம்பு கெட்டுப்போனதற்காக பெரிய வருத்தம்.
இப்படி சின்ன சின்ன விசயங்களுக்காக மக்கள் இப்படி நடந்து கொள்கிறார்களே என இரண்டு, மூன்றுமுறை தற்கொலைக்கு முயன்று தோற்றுப்போனேன்.
பிறகு, அறியாமையால்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற உண்மை அறிந்தேன்.
இதை சொன்னவர், மார்க்சிம் கார்க்கி - ருசியாவின் மாபெரும் எழுத்தாளர் தருமி.
மெத்தப் படித்த, அதிகாரத்தில் இருப்பவர்களுடைய திமிருக்கும், கொழுப்பிற்கும், அராஜகத்திற்கும், அறியாமையால் மக்கள் செய்கிற தவறுக்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது தருமி.
தலைக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கால் அல்லவா நிகழ்ந்தது?
சரியாக தெரியவில்லை...
உன் தலைக்குள் எதுவும் இல்லை என்பதையே இந்தப் பதிவு காட்டுகின்றது.
புள்ளிராஜா
என் நண்பர் ஒருவரும் இதை நினைவுப்படுத்தினார்.
டிராபிக் ராமசாமி என்பவர் தொடுத்த வழக்கால் தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக இப்பொழுது நினைவுக்கு வருகிறது.
உறுதிப்படுத்தியப் பிறகு, நானே தெரியப்படுத்துகிறேன். என் கருத்தையும் மாற்றிக்கொள்கிறேன்.
நன்றி பிரபு.
//உன் தலைக்குள் எதுவும் இல்லை என்பதையே இந்தப் பதிவு கட்டுகின்றது//
கண்டுபிடித்த புள்ளி ராஜா அவர்களுக்கு எனது அன்பான நன்றிகள்.
டரபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்புதான். நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் அரசு ஆணை பிறப்பிக்கப் பட்டது.
இது ஒண்ணும் தப்பிலிங்களே....மக்களின் பாதுக்காபுதானே.நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுக்காப்பதோடு மக்களைப் பாதுக்காப்பதுதானே அரசுகளின் கடமை.
( நான் ஒண்ணும் காமடி கீமடி பண்ணலைங்க)
காவற்ட்க்ஹுறைக்கு எக்கச் சக்க வசூல் என்பது உண்மைதான்.ஆனால் தலைக் கவசம் பாதுகாப்புத்தான்
//டிராபிக் ராமசாமி என்பவர் தொடுத்த வழக்கால் தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக இப்பொழுது நினைவுக்கு வருகிறது.
//
முற்றிலும் உண்மையான செய்தி. டிராபில் ராமசாமி என்பவர் தொடுத்த வழக்கே இதற்கு காரணம்.
ஆனால் டிராபிக் ராமசாமி என்பவர் வழக்குத் தொடுக்கத் தூண்டுதலாக இருந்தது யார்/என்ன என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது!
//டிராபிக் ராமசாமி என்பவர் தொடுத்த வழக்கால் தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக இப்பொழுது நினைவுக்கு வருகிறது.
//
இதே போல் மதுவிலக்கு ராமசாமி, புகையிலை ஒழிப்பு ராமசாமி, ஊழல் ஒழிப்பு ராமசாமி, லஞ்ச ஒழிப்பு ராமசாமி என்று பல ராமசாமிக்களும் நீதிமன்றத்தை முற்றுகை இட்டால் நன்றாக இருக்கும்! என்பது என் ஆதங்கம்!
இந்த கட்டாய ஹெல்மெட் சட்டம் பற்றி தேடியதில், டிராபிக் ராமசாமி என்பவர் தொடுத்த வழக்கால் தான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிகிறேன்.
இதனால் சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்னெவென்றால்,
உண்மை அறியாமல், பேரன், பேத்திகளுக்கு அப்பால் 'மக்கள் உயிரின்' மீதும், கரிசனம் கொண்டிருப்பார் என தவறாக நினைத்து பதிவு போட்டுவிட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.
மக்கள் மீது, உண்மையிலேயே கரிசனம் கொண்டு போராடிய டிராபிக் ராமசாமி அவர்களுக்கு நன்றி.
நானும் உண்மை எதுவென ஆராயாமல், சாக்ரடீஸ்-ன் பதிவை மறுபதிவு செய்துவிட்டேன்.
கருத்து சொன்ன தருமி, பிரபு, சோமி, நாமக்கல் சிபி, delphine, புள்ளிராஜா அனைவருக்கும் நன்றி.
//தூசி அலர்ஜி எனக்கு இருப்பதால், ஹெல்மெட் நல்லது என்பதை நான் நன்றாகவே உணர்ந்து, 5 மாதங்களுக்கு முன்பே நான் வாங்கி பயன்படுத்தி, பழசும் ஆகிவிட்டது.
//
இதே மாதிரி வேற ஒரு காரணத்துக்காக ஒருவர் helmet வாங்குவதைப் பற்றி கீழே உள்ள link’ல் ஒரு கதை படிச்சேன். :-)
http://maruthanayagam.blogspot.com/2007/03/blog-post_08.html
Post a Comment