May 16, 2007
தேவையில்லாத தாலியும், உருப்படியான தகவல்களும் - கட்டுரை
தாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.
நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி மட்டுமே!
'கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது' - வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.
'பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை' - பெரும்புலவர் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனார்.
கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.
இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.
பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது.
- தொ. பரமசிவன், தமிழ்துறைத் தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்,
எழுதிய பண்பாட்டு அசைவுகள் புத்தகத்திலிருந்து.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
தாலி என்பது கூடவே கூடாதுதான். மோதிரம் மாற்றலோடு நிறுத்திக் கொள்வதே சிறந்தது என நினைக்கிறேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
//கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.//
வாரணமாயிரம் படிக்கும்போதெல்லாம் நானும் வியந்திருக்கிறேன். அம்மி மிதித்தல், அக்னி வலம் வருதல் ஆரம்பித்து, பொரியிடல் வரை பட்டியிலிட்டவர் தாலி பற்றி ஏதும் பேசவில்லையே அப்புறம் எதற்கு அதற்கு இந்தளவு பில்டப் என்று எண்ணுவதுண்டு. எதுனால அதை இப்படி பிடிச்சுகிட்டு தொங்க ஆரம்பிச்சாங்கன்னு புரிய மாட்டேங்குதுங்க.
அதென்னங்க மாசிலா, மோதிரத்துக்கு மட்டும் விதிவிலக்கு? அடையாளம்னு வந்துட்டால் அது கையில் போடறதா இருந்தாலென்ன, கழுத்துல மாட்டிக்கறதாயிருந்தால் என்ன? ஒரு வேளை பெண் மட்டும் சுமப்பதாயில்லாமல் இருவரும் பரிமாறிக்கொள்வதால் சொல்கிறீர்களோ? எப்படியிருப்பினும் எந்த வகையான அடையாளச்சின்னமுமே தேவையில்லை என்பதுதான் என் கருத்து. பாத்துங்க, இங்கேயும் வந்து யாரவது அது எப்படி எங்க மத பழக்கத்தை மட்டந்தட்டிட்டு அவங்களோடத மட்டும் நீ உசத்தின்னு சொல்லலாம்னு கும்மியடிக்க ஆரம்பிச்சுட போறாங்க. அப்புறம் விவாதம் எங்கயோ போயிடும். :-)
திருமண ஒப்பந்தத்துக்கு அவரவர் மனசாட்சியை விடவும் உயர்ந்த சாட்சியும் அடையாளமும் இருக்க முடியாது. எதற்குத்தான் இந்த போலிகளோ?
//அதென்னங்க மாசிலா, மோதிரத்துக்கு மட்டும் விதிவிலக்கு?//
மோதிரம் என்றால் ஆணும் பெண்ணும் சரிசமமாக அணிவதால் அப்படி செய்தால் நன்று என நினைக்கிறேன். மேலும் இன்று இது உலக பொது வழக்காகி இருக்கிறது. இதில் மதத்தை நுழைத்து சம்பந்த படுத்தி பேச எதுவுமில்லை.
//மோதிரம் -உலக பொது வழக்காகி இருக்கிறது - மாசிலா//
//எந்த வகையான அடையாளச் சின்னமுமே தேவையில்லை என்பதுதான் என் கருத்து - லட்சுமி//
இதே கருத்துதான் என்னுடையதும்.
விவாதத்தின் தன்மை திசை திரும்பாமல் பார்த்துக்கொள்ளலாம்.
தாலி பற்றிய பேச்சு வரும் பொழுதெல்லாம், இது காலம் காலமாக பின்பற்றப்படுவதாக சரடு விடுகிறார்கள்.
அதற்காகத்தான் இந்த பதிவு.
திருமணச் சடங்குகளில், இப்பொழுதெல்லாம் நிறைய மாற்றங்கள் சமூகத்தில் வந்த பொழுதும், தாலி விசயத்தில் மக்கள் இன்னும் கறாராகத் தான் இக்கிறார்கள்.
மாசிலா, லட்சுமி அவர்களுக்கு நன்றி.
மாற்றமே இல்லைன்னு சொல்லிட முடியாது மகா. திரைப்படங்களிலேயே பார்த்தால், முன்னெல்லாம் குடும்பபாங்கான ஹீரோயின் என்றால் காலையில் தலையில் துண்டுடன் படுத்திருக்கும் கணவனின் காலைத்தொட்டு கும்பிட்டுவிட்டு பின் தாலியையும் கண்ணில் ஒத்திக்கொள்வார்கள். இப்போதெல்லாம் இரவு படுக்கும் முன் தாலியை கழட்டி வைத்துவிட்டு மறுநாள் அதை தேடுவது போன்ற காட்சிகள் கூட(அலைபாயுதே) தைரியமாய் திரைப்படங்களில் வைக்கப்படுகின்றன. நிஜ வாழ்விலும் அதை ஒரு நகை போல அணியும் பெண்களை நான் சந்தித்திருக்கிறேன். பெரியவர்களை திருப்திபடுத்த மட்டுமே அதை அணிவதாகவும் அவர்கள் ஊருக்கு போனதும் கழட்டி லாக்கரில் வைத்துவிடுவதாகவும் என் தோழிகள் சிலரே சொல்லி கேட்டிருக்கிறேன்.
மாசிலா, நானும் நீங்கள் சொல்ல வருவதை சரியாகவே புரிந்து கொள்கிறேன். ஆனால் புரிந்தாலும் புரியாதது போல நடிக்கும் ஒரு கும்பலே இங்குண்டு. அதனாலேயே கவனமாக இருங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
பெண்கள் திருமணத்துக்குப் பின் கூடுதலான பொறுப்பு, சுமைகள், குழந்தை பிறப்பு போன்றவற்றால் தாலியில்லாமலேயே திருமணம் ஆனவர்களாக அடையாளம் காணுமளவுக்கு சாதாரணமாகவே மாறி விடுகின்றனர். ஆண்களைப் பொறுத்தவரை இந்த வித்தியாசங்கள் தோன்ற நீண்ட நாட்களாகின்றன. எனவே, தாலி அணிந்துதான் திருமணம் ஆனதைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அதற்குக் கூடுதல் தகுதியானவர்கள் ஆண்களே.
இந்தப் பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/05/17/thaali/
//தாலி அணிந்துதான் திருமணம் ஆனதைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அதற்குக் கூடுதல் தகுதியானவர்கள் ஆண்களே - சுல்தான்//
வாயை அடைப்பதற்கு நீங்கள் சொல்வதாக புரிந்து கொள்கிறேன். அடையாளம் யாருக்குமே தேவையில்லை என்பதுதான் சரி.
லட்சுமி அவர்களுக்கு,
தாலி பற்றிய கருத்தாங்களில், மனநிலையில் மாற்றங்கள் வந்திருப்பதாக சொல்கிறீர்கள்.
நீங்கள் சொல்வது நடுத்தர வர்க்கம், இன்னும் கொஞ்சம் வசதி படைத்தவர்களிடம் தான் வந்திருப்பதாக நான் அறிகிறேன்.
//இந்தப் பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி - dubukku//
இணைப்புக்கு நன்றி. தமிழ்மணம் மாதிரி வலைதிரட்டியா அதுவும்? கட்டுரை பற்றி உங்கள் கருத்தென்ன?
சில காலம் முன்பு திருமணத்தின் போது பெண்ணுக்கு தாலி கட்டுவதைப் போல ஆண்களுக்கு கால் விரலில் மெட்டி அணிவது வழக்கமாக இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் சமூகத்தில் பெண்கள் தலை குனிந்து நடந்தனர். அவ்வாறு நடக்கும்போது அவள் கண்களுக்கு எதிரே வருபவரின் கால்கள் மட்டுமே தெரியும் என்பதால் அவள் கண்ணில் படும் வகையில் ஆண்களுக்கு மெட்டி அணிவிக்கப்பட்டது. அதுவே ஆணாக இருக்கும் பட்சத்தில் அவன் தலை நிமிர்ந்து நடப்பதால் அவன் கண்களில் படும் வகையில் பெண்ணிற்கு தாலி அணிவிக்கப்பட்டது.
சில காலம் முன்பு ஏதோ ஒரு புத்தகத்தில் இப்படி படித்திருக்கிறேன். (இது தவிர இதற்கு சில medical reasons’ம் சொல்கிறார்கள்). எது எப்படியோ ஆண்-பெண் சமத்துவம் மெதுவாக பெருகி வரும் இந்தக் காலத்தில் அனைவரும் தலை நிமிர்ந்தே நடக்கின்றனர். மேலும் தேவையான medical facilities’ம் பெருகி வருகிறது. அந்த காலத்தில் எப்படியோ தெரியாது ஆனால் இன்றைய கால கட்டத்திற்கு தாலி ஒரு extra சுமையாகவே தோன்றுகிறது.
சமீபத்தில் கூட ஒரு நண்பனின் திருமணத்தில் அவனுக்கு மெட்டி அணிவித்தனர். ஆனால் இப்போது இது வெறும் சடுங்கு மட்டுமே, திருமணம் முடிந்த பின் அதை கழற்றி விட்டான். அப்படி ஒரு நிலை தாலிக்கும் வரலாம்.
அப்படி வந்தால்!!! வரவேற்போம்!!!
நன்றி பிரசாத்.
நீங்கள் சொல்வது போல, தோடு, மூக்கத்தி, கொலுசுக்கு கூட மருத்துவ காரணங்களை, சிலர் பொறுப்பாக இன்றைக்கும் கண்டுபிடித்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
பல சடங்குகள், சம்பிரதாயங்கள் இன்னும் பெண்ணைத் தான் வாட்டி வதக்கின்றன. ஆணிடமிருந்து எப்பொழுதோ விடுபட்டுவிட்டன.
இது ஒரு தொடர் போராட்டம்தான்.
{panpadu} is a name mostly used to hide male domination and the volince against women quality and democrasy.
tamil womens ,feminest should be awer of male domination supportive psychartists who writes in tamil magazeens their views are opposed to women democrasy,equality andself confidence.
tamil feminest should be awer of eve teasing dialougs in tamil cinema and tv serials which is oppose to women democrasy and equality.
Post a Comment