Jul 12, 2015

மாற்றம்! முன்னேற்றம்!

காலையில் எழுந்து தூக்க கலக்கத்தில் தினசரியைப் பார்த்தேன். முழுப் பக்கத்தில் அன்புமணி எங்கேயோ விட்டத்தைப் பார்த்து மிரள்வதாக தெரிந்தது. வீட்டில் பிள்ளைகள் பார்த்தால், பயப்படப்போகிறார்கள் என ஒளித்து வைத்தேன்.

 ஏதோ திரில்லர் படம். அன்புமணி நடிக்கப்போகிறார் என நினைத்தேன். அன்புமணி நம்ம நடிகர் அருண்பாண்டியன் போல! உணர்ச்சி செத்த முகமாயிற்றே! ’அதுக்கெல்லாம் இவர் சரிப்பட்டுவர‌மாட்டாரே!” என நினைத்தேன்.

கீழே சின்ன எழுத்தில் anbumani4cm.com என்றிருந்தது. தேர்தல் நெருங்குகிறது அல்லவா! இப்படி பல அதிர்ச்சிகளை காண மனதை தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என நினைத்தேன்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

4 comments:

Anonymous said...

ஒபாமா, மோடி ஸ்டைலில் தேர்தல் பிரசாரத்தை வலைத்தளத்தில் ஆரம்பிக்கிறாராம் அன்பு,,,, மரம் வெட்டுவது மாற்றம் .... வன்னியர் அல்லாத ஜாதிக்காரனை வெட்டுவது முன்னேற்றம்....

வலிப்போக்கன் said...

ஓபாமா பார்வை உலக (சூறையாடுவது )...அ.மணி பார்வை உள்ளுர் சாதியப்பா்வை

வலிப்போக்கன் said...

ஓபாமா பார்வை உலக (சூறையாடுவது )பார்வை, ...இந்த வன்னியர் பார்வை உள்ளுர் சாதியப்பா்வை

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயோ பாவம்...!