May 24, 2007

வாழ்க்கை - கவிதை


பரமபதமாகி விட்டது
வாழ்க்கை

கவனமாய்
மெல்ல மெல்ல
நகர்கிறேன்

கிடைத்த சிறு ஏணியில்
உற்சாகமாய்
மேலே ஏறுகிறேன்

நகரும் பாதையில்
ஏணியை விட
பெரிய பாம்பு கொத்தி
துவங்கிய புள்ளியிலேயே
துவண்டு விழுகிறேன்

வயதுகள் கடக்கின்றன
பொறுப்புகள் பெருகுகின்றன
சுமைகள் அழுத்துகின்றன

மீண்டும் நகர்கிறேன்
நம்பிக்கையுடன்

தூரத்தில் சில
ஏணிகள் தென்படுகின்றன

தெரிந்தும் வசதியாய்
மறந்துவிடுகிறேன்
தூரத்தில் தெரியும்
ஏணியைவிட பெரிதான
சில பாம்புகளை

3 comments:

அமிர்தா said...

இந்த கவிதை இயல்பான வாழ்க்கையை சொல்கிறதா? நம்பிக்கையை விதைக்கிறதா? நம்பிக்கையின்மையை விதைக்கிறதா?

படிக்கிறவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள். ஏனெனில், ஒருபோதும் நம்பிக்கையின்மை கவிதைகளை எழுதக்கூடாது. யார் எழுதினாலும் வெளியிடக்கூடாது என்ற கருத்துடையவள் நான்.

சுந்தர் / Sundar said...

//மீண்டும் நகர்கிறேன்
நம்பிக்கையுடன்
///

நம்பிக்கையை ஊட்டுகிறது கவிதை .

அமிர்தா said...

நன்றி சுந்தர்.

இலக்கியங்கள் நமக்கு எப்பொழுதும் நம்பிக்கை தரவேண்டும். சண்டையிடல் வேண்டும். அக அழுக்குகளை களைதல் வேண்டும். மேன்மையடைய செய்தல் வேண்டும்.