நமது தெருக்களை காணவில்லை.
உணவிற்காகவும்,உடைக்காகவும் அல்லாடுகிறோம்.
திருமண மண்படங்களும், பள்ளிக்கூடங்களும்
நமது தற்காலிக கூடுகளாகியிருக்கின்றன.
நமது வீடுகள் நீரில் மிதக்கின்றன.
’வரலாறு காணாத மழை’ என சொல்லி
தமது குற்றங்களை ஒளித்துக்கொள்கிறார்கள்.
தேர்தல் நெருங்குவதால்
ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும்
கொஞ்சம் சுறுசுறுப்பாக இயங்குவதாக நடிக்கிறார்கள்.
நேற்று
நீருக்காக ஏங்கிநின்றோம்.
இன்று
மழை பெய்ததற்காக வருந்திநிற்கிறோம்.
நாளை மெல்ல மெல்ல மழை நீர் வடியும்.
அத்தோடு நமது கோபங்களும்!
அவர்கள் ’அதைத்தான்’ நம்மிடமிருந்து
எதிர்ப்பார்க்கிறார்கள்.
2 comments:
சரி தான்... சரியே தான்...
மிக சரி. எந்த முன் நடவடிக்கையும் எடுப்பதில்லை. மக்களும் இந்த அவலங்களில் வாழ பழகி விட்டனர். ஏன் இந்த அரசு இப்படி செயலற்று உள்ளது என்று கேட்க கூட யாரும் முன் வருவதில்லை.
Post a Comment