Oct 22, 2015

நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு உட்பட்டே நாம் வாழ்ந்து வருகிறோம். - அருந்ததிராய்






 ”ஒரு விஷயத்தை நிறுவ முதலில் அது விசாரிக்கப்படவேண்டும். ஆனால் ஒரு விஷயத்தை விசாரிக்க வேண்டுமென்று நீங்கள் கேட்கும்போது, அதற்கான வாதத்தை நீங்கள் முன்வைக்க நேரும்; உங்கள் வாதத்தை முன் வைக்கும் போது, நீங்கள் நீதிபதி ஒருவர் மீது இகழத்தக்க உள்நோக்கத்துடன் சுமத்துவதாக கருதப்படும். அதையே ஓர் அவமதிப்பாகக் கொண்டு உங்களைக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்க முடியும் அதாவது: எதையும் விசாரிக்காமல் நிரூபிக்க முடியாது; எதையும் நிரூபிக்காமல் விசாரிக்கவும் முடியாது!

நம்முன் வைக்கப்பட்டுள்ள ஒரேயொரு மாற்று நடைமுறை, தூய சிந்தனைகளில் ஈடுபடுவதே.

எடுத்துக்காட்டாக:

(அ) இந்திய நீதிபதிகள் தெய்வப்பிறவிகள்.

(ஆ) பண்பு, திட்பம், ஒழுக்கம், திறந்து மனது, நேர்மை என்பன
நமது நீதிபதிகளின் பிறவி மரபணுவிலேயே பொறிக்கப்பட்டுள்ளன.

(இ) நமது குடியரசின் வரலாற்றில் எந்த நீதிபதியும் எந்த விதத்திலும் குற்றச்சாட்டுக்கோ ஒழுங்கு நடவடிக்கைக்கோ உள்ளாக்கப்பட்டதில்லை.

(ஈ) நீதித்துறை வாழ்க! இந்தியா வாழ்க!

நீதித்துறையில் நிலவும் ஊழல் பற்றி நீதிபதி எஸ். பி. பருச்சா போன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் பகிரங்கமாகப் பேசுவது சிக்கலானதாக இருக்கிறது. அப்படிப்பட்ட வேளைகளில் நாம் காதை பொத்திக் கொள்ள வேண்டும் அல்லது ஒரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் போலும்.
நீதித்துறை நிகழ்த்தும் சர்வாதிகாரத்துக்கு உட்பட்டே நாம் வாழ்ந்து வருகிறோம். அதை ஒப்புக்கொள்வதால் நமது பெருமைக்கு இழுக்கு நேரலாம். நமது சுதந்திர உணர்வு கட்டுண்டு போகலாம்.”

- "Scandal in the Palace" அருந்ததிராய் அவுட்லுக் 2007 எழுதிய கட்டுரையிலிருந்து....

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை
90946 66320
 

No comments: