Oct 19, 2015

அவமதிப்புச் சட்டமே நீதித்துறையின் ஆயுதங்களுள் மிகவும் வலுவானது! - அருந்ததிராய்


"நீதித்துறையின் முறைகேடு தொடர்பான விஷயங்களை ஆராய்வதற்குச் சுதந்திரமான ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென்று நீதித்துறை பொறுப்பேற்புக் கடப்பாட்டுக் குழு முன் வைத்த யோசனையையும் நீதித்துறை எதிர்த்துள்ளது. தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறாது, பதவி வகிக்கும் எந்த நீதிபதிக்கும் எதிராக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய முடியாது என்றும் நீதித்துறை ஆணையிட்டுள்ளது. (அதற்கு தலைமை நீதிபதியின் ஒப்புதல் என்றுமே கிடைத்ததில்லை). தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு உட்படாதவாறு தன்னைப் பாதுகாப்பதிலும் இதுவரை அது வெற்றி பெற்றுள்ளது.

நீதிமன்ற அவமதிப்புச் சட்டமே நீதித்துறையின் ஆயுதங்களுள் மிகவும் வலுவானது. அதன்படி, நீதிமன்ற அதிகாரத்தின் மீது ‘அவதூறு தெரிவிக்கும்’ வண்ணம் அல்லது அதை ’இழிவுபடுத்தும்’ வண்ணம் எதையாவது செய்வது அல்லது சொல்வது குற்றம். இது இரகசிய மொழியில் இயற்றப்பட்ட சட்டம்; பெண்களுக்கு நாணத்தைப் போதிக்கும் பழங்கால கருத்துக்களுக்கு உகந்த சட்டம். எனினும் நீதித்துறையை விமர்சிப்பவர்களை அமைதிப்படுத்தவும் அசௌகரியமான கேள்விகளை எழுப்புவோரைச் சிறையில் தள்ளுவதற்கும் வகை செய்யும் கொடுங்கோன்மையான, வல்லமை மிக்க அதிகாரங்களை இச்சட்டம் நீதித்துறைக்கு அளிக்கிறது.

எனவே நீதித்துறையில் நிலவும் முறைகேடுகளை வெளியிடுவதிலும் அன்றாடம் நமது நீதிமன்றங்களை உலுக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துவதிலும் ஊடங்கங்கள் அடக்கி வாசிப்பது ஆச்சரியமல்ல. ஊடகர்கள் பெரும்பாலானோர் நீண்ட குற்ற வழக்கு விசாரணையைச் சந்திக்கவோ சிறைத் தண்டனையைப் பெறவோ விரும்புவதில்லை.

 - "Scandal in the Palace" அருந்ததிராய் (அவுட்லுக் 2007) எழுதிய கட்டுரையிலிருந்து....

No comments: