மதுவுக்கு எதிராக பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் கல்லூரி அருகே இருந்த
கடையை நொறுக்கினார்கள். கைது செய்யும் பொழுது காவல்துறை
காட்டுமிராண்டித்தனமாக தாக்கினார்கள். ஊடகங்கள் வழியே உலகமே பார்த்து
காவல்துறையை காறித்துப்பியது!
கைது செய்து, நிராயதபாணியாக இருந்த
மாணவர்களிடம், காவல்துறை வெறி அடங்காமல், சேத்துப்பட்டு
காவல்நிலையத்திலும், சிறையிலும் சித்திரவதை செய்தது!
இதோ சம்பந்தபட்ட RSYF மாணவர்களே விளக்குகிறார்கள்! பாருங்கள்!
https://www.youtube.com/watch?v=60DN-n-cgog
சட்டமன்றத்தில் சாராயக்கடைகளை மூடமுடியாது! என திமிராக அறிவித்துள்ளார்
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். ’குடி’ மக்களை நேசிக்கும், ’திறமையான’
முதலமைச்சர், ரவுடிகளுடன் குலாவும், மக்கள் மீது மீது பாய்ந்து குதறும்
காவல்துறை இருக்கும்வரை சாராயக்கடைகளை மூடமாட்டார்கள் தான்!
டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் எங்கெல்லாம் மக்கள் ஒற்றுமையாகவும்,
உறுதியாகவும் எதிர்த்து நின்றார்களோ அங்கெல்லாம் இன்னும் அரசு சாராயக்கடையை
திறக்கவில்லை. திறக்கமுடியவில்லை.
போராட்டங்கள் தான் தீர்வு! வேறு ஏதும் குறுக்குவழியில்லை!
No comments:
Post a Comment